மட்டக்களப்பு மாநகர
சபையினால் பல துரித அபிவிருத்தி
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதன்கீழ்
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளை அழகு படுத்தும் வகையில்
அலங்கார மரங்களை நடும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது
மட்டக்களப்பு மாநகர
சபையின் நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் ஓர் செயற்பாடாக மட்டக்களப்பு திருகோணமலை பிரதான
வீதியின் மத்தியில் அலங்கார மரங்களை நாட்டும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன
இதன் கீழ் மட்டக்களப்பு
பார் வீதியில் பொக்ஸ்வேகன்,கிறிஸ்டினா, போகன் விலா போன்ற மரங்களை நடும் நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டன.
யுனிசெப் நிறுவனத்தின்
நிதி அனுசரணையில் சிறுவர் நிதியத்தின்
கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும்
இத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு
திருகோணமலை பிரதான வீதியின் மத்தியில் அலங்கார மரங்களை நாட்டும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன
இந்நிகழ்வில் மாநகரபிரதி
முதல்வர் க.சத்தியசீலன், பிரதி
ஆணையாளர் நா. தனஞ்ஜெயன், மட்டக்களப்பு பொதுமக்களுக்கான பொலிஸ் தொடர்பாடல் அதிகாரி இலங்கரத்ன ,யுனிசெப்
மற்றும் சிறுவர் நிதியத்தின் உத்தியோகத்தர்கள் , பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும்
கலந்துகொண்டு மரங்களை நட்டுவைத்தனர்.