யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
யாழ். வேம்படி சந்திக்கருகில் கூடிய போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது, “சட்டங்கள் மக்களைப் பாதுகாக்கவா? அச்சுறுத்தவா?, மக்களின் உரிமைகளைப் பறிக்காதே, நாட்டு மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதே, ஊடகங்களின் உரிமைகளைப் பறிக்காதே, அரசியல் கைதிகளை விடுதலை செய்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.