அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் பற்றி கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்நாட்டு ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “ நியூசிலாந்து அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸ்களில் நல்ல ஆட்டத்தினையே வெளிப்படுத்தினோம்.
எங்களுக்கு (இங்கே) துடுப்பாட்டமோ பந்துவீச்சோ ஏதாவது ஒன்றில் சிறப்பான ஆரம்பத்தை காட்ட வேண்டியிருக்கின்றது. நாங்கள் எங்களது கடந்த (டெஸ்ட்) தொடரிலிருந்து பாடம் கற்றிருக்கின்றோம்.
அத்தோடு எங்களது வீரர்களும் போட்டித் திட்டங்களுடன் காணப்படுகின்றனர். அவற்றை எமது வீரர்கள் களத்திற்கு கொண்டு வருவார்கள் எனில், அது எங்களுக்கு சிறந்த ஆரம்பத்தினை தரும்.
எமது வேகப்பந்துவீச்சாளர்கள் தற்போது ஒரு ஸ்திர நிலையில் உள்ளனர். எனவே, எங்களுக்கு 300 இற்கு மேலாக ஓட்டங்கள் கிடைக்கும் எனில் அது துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து கிடைக்கும் பெரிய விடயமாக அமையும்.
இந்திய அணியின் பந்துவீச்சுத்துறை (குறிப்பாக 40 இற்கும் 80) இடைப்பட்ட ஓவர்களில் நன்றாக இருந்தது. இதனாலேயே, அவர்கள் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றிருந்தனர். ஒரு அணியாக இதேமாதிரியான ஒரு விடயத்தை நாமும் செய்ய விரும்புகின்றோம்.
எங்கள் அனைவருக்கும் அஞ்செலோ (மெதிவ்ஸ்) எப்படி நல்ல வீரர் என்பது தெரியும். நாங்கள் நிச்சயமாக இத்தொடரில் அவரின் இழப்பினை உணர்கின்றோம்.
கடைசியாக (நியூசிலாந்தில் இடம்பெற்ற) டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக செயற்பட்டிருந்ததோடு, கூடுதலான அனுபவத்தையும் கொண்டிருக்கின்றார்.
இந்த டெஸ்ட் தொடர் இளம் வீரர்களுக்கு தங்களது திறமையினை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமாகும். (இளம் வீரர்கள்) அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எதிர்காலத்தில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கையை வளர்க்கும்.
எங்களிடம் ஒரு சிறப்பான விடயம் இருப்பதாக நம்புகின்றோம். அதனை எங்களுக்கு வெளிப்படுத்த முடியுமாயின் நேரான பாதை ஒன்றில் பயணிக்க முடியும்“ என தெரிவித்துள்ளார்.
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியுடன் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகின்றது.