திருகோணமலை நகர எல்லைக்குட்பட்ட வீரநகர் கிராமத்தைச் நேர்ந்த நாகேந்திரன் டிலக்சன் வயது (30) இயந்திரப் படகு மூலம் கடந்த 16ம் திகதி அதிகாலை 5.00 மணியளவில் தொழிலுக்குச் சென்றவர் அன்று மாலை கரை திரும்பாத காரணத்தால் அவரைத் தேடும் நடவடிக்கையில் கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் படகுகள் மூலம் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் அவரைக் கண்டு பிடிக்க முயாது போனது.
இன்று (18)ம் திகதி 17 மீன்பிடிப் படகுகள் மூலம் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது திருகோணமலைக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியில் படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார்
மீட்கப்பட்டவர் உணவு தண்ணீர் இல்லாமல் பலவீனமான நிலையில் இருந்ததால் ஈச்சிலம்பறறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.என கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
(அ . அச்சுதன்)