ஓட்டிசம் எனப்படும் மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவன் மிகக் குறைந்த பேச்சாற்றலையும், நுணுக்கமான புலன் சவால்களையும் கொண்டுள்ளான்.
ஆனால் அந்த சிறுவன் தனது கலைத்திறமைக்கு எந்தவித பங்கமும் ஏற்படாமல் மிகச் சிறந்த வகையில் பல ஓவியங்களை தீட்டி வருகிறான்.
நியாம் ஜயின் என்ற குறித்த சிறுவன் வரைந்த ஓவியங்கள் கலைகளில் உள் உணர்வுகளை வெளிக் கொண்டுவரும் பாணியில் உள்ளது,
கலை வல்லுனர்கள் சிறுவனின் படைப்புகளை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவனுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஓவியங்களில் சில சுமார் 5000 அமெரிக்க டொலர்கள் வரை மிக இலகுவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய ஓவியங்களை நியாம் ஜயின் கடந்த 3 வருடங்களாகவே வரைந்து வருகின்றான் என்பது குறிப்பிடத்தக்கது.