இராணுவ தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எல்லையில், நமது எதிரிகளுக்கு இந்திய இராணுவம் உரிய பதிலடி கொடுக்கிறது. இதனால், அவர்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லையில், அத்துமீறி நடந்துக்கொண்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க இந்திய இராணுவம் தயங்காது. காஷ்மீர் எல்லையில், இந்திய இராணுவம் கட்டுப்பாடுடன் நடந்து வருகிறது.
காஷ்மீரில் இந்திய இராணுவத்தால், பயங்கரவாதிகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு, இளைஞர்கள் வலுக்கட்டாயமாக பயங்கரவாதிகளாக மாற்றப்படுவதுடன், கைகளில் ஆயுதங்கள் திணிக்கப்படுகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் அமைதி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஊடுருவல் காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சமூக வலைதளங்கள் பிரிவினைவாத செயலுக்கு பயன்படுவதால், அதனை ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் கவனமாக பயன்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இராணுவம் நிறைவேற்றும்” என்றும் தெரிவித்துள்ளார்.