சென்னையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தாவில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தவறென ஏனைய கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிடவில்லையென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் நிறைவுபெற்ற பின்னர், பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்போம் என்றே அவர்கள் தெரிவித்தார்களெனவும் மு.க.ஸ்டாலின் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சென்னையில் ராகுல் காந்தியை முன்மொழிந்த ஸ்டாலின், கொல்கத்தாவில் ஏன் அவ்விடயம் தொடர்பில் பேசவில்லையென பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.