நமசிவாய வாழ்க
மண்ணும் விண்ணும்
இறைதனின் ஆக்கம்
வாழும் உயிரும்
இறைதனின் ஆக்கம்
இயற்கையின் வளமும்
இறைதனின் ஆக்கம்
இன்னும் சொல்லில்
இறையே யாவும்
மதமும் பிரிவும்
மனிதனின் படைப்பே
இறைவன் கூட
மனிதனின் படைப்பா???
மண்ணில் முழுதாய்
பரந்தே கிடக்கும்
எண்ணில் என்றும்
எல்லா இறையும்
கண்ணினில் யாவும்
சிவமாய் தெரியும்
எம்முள் சிவத்தை
நாமே அறிய
எல்லாம் சிவமே
எதிலும் சிவமே
இறையதன் உள்ளே
நிறைவது ஆவோம்
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்