——— நமசிவாய வாழ்க ———
பிறையொடு ஒருவன்
இறையாய் அவனை
முறையாய் வணங்கி
நிறையாய் வாழ.....
பரனவன் சிவனை
பரைஉமை அவளை
பணிவாய் தொழுதே
பாரில் சிறந்து......
திடமாய் என்னை
புடம்பட உருக்கி
விடையதை அறிய
விடையோன் பணிந்து...
திறமுடன் நாளும்
நயம்பட நாவில்
நற்சொல் உரைத்து
அன்பினை பெருக்கி
நஞ்சமுது உண்டோன்
நினைவினில் இருத்தி
நற்றவன் நாமம்
நமசிவாய சொல்லவே
நல்லது நடக்கும் !
நாளும் சிறக்கும் !
"ஓம் நமசிவாய"
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏