நேற்றிரவு (சனிக்கிழமை) காரொன்றில் வந்த பயங்கரவாதிகள் பொலிஸ் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் மற்றும் முறைப்பாடு தெரிவிக்க வந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர்.
பயங்கரவாதிகளை நோக்கி சில பொலிஸ்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக பொலிஸ் நிலைய வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது.
இந்த சம்பவத்தில் 3 பொலிஸ்காரர்கள், பொதுமக்கள் 2 பேர் மற்றும் ஒரு பயங்கரவாதி என 6 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சமரில் மேலும் 3 பொலிஸ்காரர்கள் காயமடைந்தனர்.
பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முடியாமல் பின்வாங்கிய 2 பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விட்டுச் சென்ற காரில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை சிறப்பு பொலிஸ் படையினர் செயலிழக்கச் செய்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.