மெல்பேர்னிலுள்ள மற்றுமொரு அகதிகள் தடுப்பு முகாம் (MIDC) மூடப்பட்டதை தொடர்ந்து, மெல்பேர்னிலுள்ள இந்த இடைத்தங்கல் முகாமான Melbourne Immigration Transit Accommodation நிலையத்துக்கு அனைத்து அகதிகளும் அண்மையில் இடம்மாற்றப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் தடுப்புமுகாமில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும், முகாம் அதிகாரிகள் தங்களை கைதிகள் போல நடாத்துவதாகவும் தெரிவித்தே இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 140 இற்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்றுள்ளதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், குறித்த தடுப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளியான செய்தியை மறுத்துள்ள உள்துறை அமைச்சு, ஒரு சில அகதிகள் மாத்திரம் அமைதியான முறையில் போராட்டம் நடத்திவருவதாகவும், அவர்கள் அனைவரும் உணவு உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.