டேவிட் அண்ட்ரூ டெல்லர் (வயது 30) என்ற குறித்த கனடா சுற்றுலாப் பயணி கடந்த முதலாம் திகதி இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்றுள்ளார்.
இந்தநிலையில், மும்பை சுற்றுலா தலங்களை கண்டு களித்த பின்னர் விமானம் மூலம் நேற்று (சனிக்கிழமை) காலை 5 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து வாடகை கார் மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் காரிலேயே தனது கைத்தொலைபேசி மற்றும் கடவுச் சீட்டு அடங்கிய பையை தவறவிட்டுள்ளார்.
இதுகுறித்து கனடா சுற்றுலா பயணி காலை 7 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலைய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்,.
சுற்றுலா பயணி சஞ்சரித்த இடங்கள் மற்றும் விமான நிலையத்தில் இருந்த சி.சி.ரி.வி கமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், வாடகை கார் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு சாரதியிடம் தகவல் பெறப்பட்டது. இதன்படி 4 மணித்தியாலங்களில் கனேடிய சுற்றுலா பயணியின் பயணப் பொதி மீட்டு வழங்கப்பட்டது.