துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்ததை அடுத்து நெடுஞ்சாலை 407 இந்த ரொறன்ரோ ட்ரஸிட் சேவையின் சுரங்கப்பாதை நிலையம் மூடப்பட்டுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த விபத்தை அடுத்து வோகன் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலை 407 மற்றும் நெடுஞ்சாலை 400 நெடுஞ்சாலை அருகே உள்ள குறித்த நிலையம் விசாரணைக்காக மூடப்பட்டுள்ளது.
இந்த பாதையுடனான போக்குவரத்து இன்று (புதன்கிழமை) காலையில் இருந்து மீண்டும் வழமைக்கு திரும்பும் என யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.