குறிப்பாக தென்கிழக்கு கடற்கரையோரப் பகுதியைத் தாக்கிய சூறாவளியால் வீடுகள், வாகனங்கள், பொதுநிறுவனங்கள் என ஏற்பட்ட சேதத்தின் அளவு 37 மில்லியன் டொலர்கள் என கனடாவின் காப்பீட்டு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதியில் புயல் தாக்கம் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் சுமார் 750,000 வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றி கிறிஸ்மஸ் வரை பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் கனடா முழுவதிலும் நிலவிய தீவிர வானிலை காரணமாக ஏற்பட்ட சேதத்தில் குறித்த புயல் தாக்கமே அதிகளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 1.9 பில்லியன் இழப்புக்களை இந்த புயல் ஏற்படுத்தியுள்ளதாக கனடாவின் காப்பீட்டு பிரிவின் உறுப்பினர் ஆரோன் சதர்லாண்ட் தெரிவித்துள்ளார்.