நெல்வயலில் அவரது சடலம் கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அமந்தா மிச்செலுக் (வயது-34) என்ற யுவதியும் அவரது தந்தையும் சென்ற வாகனம் கடந்த வியாழக்கிழமை பனியில் சிக்கியது. அதனைத் தொடர்ந்து நெருப்பு மூட்டுவதற்காக இருவரும் விறகுகளை தேடிச்சென்றபோது அமந்தா காணாமல் போயிருந்தார்.
இந்நிலையிலேயே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குளிரினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், வெப்பநிலை சடுதியாக குறைவடைந்துள்ளது. இக்காலத்தில் பனிச்சறுக்கல் விளையாட்டுக்களில் ஈடுபடவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.