அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.
இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) கனடாவில் வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது என கனேடிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனடாவின் சில பகுதிகளில் 26 km/h வேகத்தில் கடும் பனிப்புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.