டேரம் பொலிஸார், றோயல் கனேடியன் பொலிஸார், ஒன்ராறியோ மாகாணப் பொலிஸார், ரொறன்ரோ, பீல், கிங்ஸ்டன் மற்றும் ஹால்டன் பொலிஸார் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது 2.1 மில்லியன் டொலர் பணமும் போதைப்பொருள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட 19 பேரில் 14 பேர் டேரம், ரொறன்ரோ, பீல் மற்றும் கிங்ஸ்டன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களிடம் 600,000 டொலர் பணம், 4 ஆயுதங்கள், 5 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.