பிரித்தானியாவை சேர்ந்த Imarni Chowdhury என்ற 11 வயது குழந்தை சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது the Diana, Princess of Wales மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அங்கு பணிபுரியும் மருத்துவர் கூறுகையில், “சிறுமி சிறுநீர் கழிப்பதற்கு கூட அதிக அளவிலானா மருந்தை உட்கொண்டு வருகிறார்.
இந்த நோயால் லின்கோல்ன்ஷையரில் பாதிக்கப்பட்ட ஒரே நபர் இவர் மட்டும் தான் என கூறியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முறையான சிகிச்சை பெற சிறுமியின் குடும்பத்தார் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை ரஹ்மான் பேசுகையில், என்னுடைய மகள் ஒரு சிறுமி அனுபவிக்க கூடிய மகிழ்ச்சி எதையும் அனுபவிக்க முடியவில்லை.
அவளுடைய வலியை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வலி மூன்றாம் கட்ட தீக்காயங்கள் அல்லது நான்காவது நிலை புற்றுநோய் வலியை போல இருக்கிறது. அதிலிருந்து திசை திருப்ப கார்ட்டூன் படங்களை டிவிகளில் போட்டு காண்பித்து வருகிறோம்.
அடுத்த வாரம் கொண்டாடவிருக்கும் 12 வது பிறந்தநாளில் என்ன பரிசு வேண்டும் என கேட்டபொழுது, உயிருடன் இருக்க விரும்பவில்லை என கூறுவதாக வேதனை தெரிவித்திருக்கிறார்.
மேலும் பேசுகையில், நாங்கள் சிகிச்சைக்காக திணறி வருகிறோம். மருத்துவர்கள் ஏன் சிகிச்சை கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. என்னுடைய மகளை காப்பாற்ற உறவினர்களிடம் பிச்சை எடுக்க கூட நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய எலும்புகள் தேயும் வரை நான் வேலை செய்து பணத்தடை சேமிப்பேன் என கூறியிருக்கிறார்.