மீடூ இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அரசு சார்பில் உயர் மட்ட அமைச்சரவை கூடும் முதல் கூட்டம் இதுவாகும்.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் கூறும்போது, குழு உறுப்பினர்கள் அனைவரும் டிசம்பர் 10-ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் குழு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் தலைமையில் இயங்கும் என்று தெரிவித்தது.
முன்னதாக முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், அவர் தனது பதவியை அக்டோபரில் ராஜினாமா செய்தார். அடுத்த சில நாட்களிலேயே கேபினட் அமைச்சரவை, உயர் மட்டக் குழுவை அமைத்தது.