ம.க.இ.பே.தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்து இரவு பகலாக சேவையாற்றிய மருதமுனை ஐ.பி றகுமானின் மறைவு கல்முனை மாநகரப் பிரதேச மக்களுக்குப் பேரிழப்பாகும் என மருதமுனை கலை இலக்கியப் போரவையின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:- எந்த விதமான அதிகாரங்களும் இல்லாத நிலையிலும் அரசியல்வாதிகளிடமும்இ அதிகாரிகளிடமும் தனக்கிருக்கின்ற செல்வாக்கைப் பயன் படுத்தி தன்னை நாடிவருகின்ற மக்களுக்கு மனம் நோகாமல் சேவையாற்றியவர்.
பொலிஸ் அதிகாரியாக இருந்த காலத்திலும்இகல்முனை மாநகர சபை உறுப்பினராக இருந்த காலத்திலும் இனஇமதஇவேறுபாடின்றி தமிழ்இமுஸ்லிம்.சிங்கள மக்களுக்கும் சிறந்த சேவையாற்றியவர்.எந்த நேரத்தில் யார் சென்றாலும் அமரவைத்து ஆறுதல் வார்த்தை கூறி அரவணைத்து தன்னால் முடிந் பணிகளைச் செய்துகொடுப்பார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇதற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் மிகவும் நெருக்கமான தொடர்புடன் அமைச்ர்களின் மூலமாக பல அபிவிருத்திப்பணிகளை கல்முனை மாநகரப் பிரதேசத்திற்குச் செய்தவர்.இந்த நல்ல மனிதரின் மறைவு மக்களுக்குப் பேரிழப்பாகும்.என அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.