பாலர் பாடசாலை சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களும் , பயிர்ச் செய்கைக்கான கூட்டுப்பசளை தயாரிக்கும்
உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு வவுணதீவில் நடைபெற்றது
வவுணதீவு கொத்தியாபுலை சரஸ்வதி பாலர் பாடசாலை
சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களும் மற்றும் வவுணதீவு கொத்தியாபுலை கிராமத்தில் போசாக்கு குறைபாடுள்ள பிள்ளைகளின்
தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு வீட்டுதோட்ட பயிர்ச் செய்கைக்கான கூட்டுப்பசளை
தயாரிக்கும் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு வவுணதீவு கொத்தியாபுலை சரஸ்வதி பாலர் பாடசாலை
நடைபெற்றது
வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம் மட்டக்களப்பு
மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தும் வகையில் பல அபிவிருத்தி வாழ்வாதார உதவி வேலைத்திட்டங்களை
முன்னெடுத்து வருகின்றது
இதன்கீழ் வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்
குடும்பங்களில் தெரிவு செய்யப்பட பயனாளிகளின்
பிள்ளைகளின் போசாக்கு , கல்வி , சுகாதாரம் , மற்றும் வரிய குடும்பங்களின்
வாழ்வாதாரம் ,சுயதொழில் போன்றவற்றை
மேம்படுத்தும் வகையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் வவுணதீவு
கொத்தியாபுலை சரஸ்வதி பாலர் பாடசாலை சிறார்களின் கல்வி செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில்
சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களும் மற்றும்
வவுணதீவு கொத்தியாபுலை கிராமத்தில்
போசாக்கு குறைபாடுள்ள சிறார்களின்
போசாக்கை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு வீட்டுதோட்ட
பயிர்ச் செய்கைக்கான கூட்டுப்பசளை தயாரிக்கும் உபகரணங்களும் வழங்கி
வைக்கப்பட்டது
வவுணதீவு கொத்தியாபுலை சரஸ்வதி பாலர் பாடசாலை
நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச
செயலாளர் திருமதி . சுபா சதாகரன் ,
வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர்
திருமதி . நிலக்ஷி தவராஜா , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட இணைப்பாளர்
மாரி இவாஞ்சலின் , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் கே
.யசோதரன் ,வவுணதீவு கொத்தியாபுலை சரஸ்வதி பாலர் பாடசாலை ,ஆசிரியர்கள்
. பயனாளிகள் கலந்துகொண்டனர்