உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலை கைதிகளினால் பொதுமக்களை விழிப்புனர்வூட்டும் வகையிலான நடைபவணி சனிக்கிழமை (1) சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் கே.ஏ.எஸ்.அபேரத்தின தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து ஆரம்பித்த நடைபவணி திருகோணமலை நகரம்
ஊடாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தினூடாக திருகோணமலை சிறைச்சாலையை வந்தடைந்தது.
இதில் பதினொரு சிறைக்கைதிகள் கலந்து கொண்டதோடு பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறைச்சாலை புனர்வாழ்வு உத்தியோத்தர்கள்,பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.