LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, December 14, 2018

இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வினை கண்டறிதல் கலந்துரையாடல்

 இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வினை கண்டறிதல் , இரண்டாம் நிலைக் கல்விச்சேவை வழங்கல் தொடர்பான  மதிப்பீடு ஆய்வு அறிக்கை இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது . 



2015  டிசம்பர் மதம் முதல் 2019  ஏப்பரல் மாதம்  வரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் எக்டெட் நிறுவனம் இலங்கையில் மட்டக்களப்பு ,மொனராகலை ,.முல்லைத்தீவு ஆகிய மூன்று மாட்டங்களிலும் இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வினை கண்டறிதல் , இரண்டாம் நிலைக் கல்விச்சேவை வழங்கல் தொடர்பான     திட்டங்கள்  நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன . 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 மாதகால திட்டமாக  20 கிராம சேவை பிரிவுகளில் இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வினை கண்டறிதல் , இரண்டாம் நிலைக் கல்விச்சேவை வழங்கல் ,சுகாதாரம் ,பாடசாலைகளுக்கான விளையாட்டு மைதானம் ,குடிநீர் வசதி ,பொதுநூலகம் , மாணவர்களுக்கான கணணி பயிற்சி நெறிகள் , வீதி அபிவிருத்தி ,வடிகான் கட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களின் செயல்பாடுகள் , கிராம சேவையாளர்களை வினைத்திறனான செயல்பாடுகள் போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இல்லத்திரனியல் குடிமக்கள் மதிப்பீடு ஆய்வு அறிக்கை தொடர்பாக அரச மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தும் இரண்டாம் கட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  சர்வோதயத்தில் நடைபெற்றது

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் எக்டெட் நிறுவனம் அனுசரணையில்  வறுமை ஆராச்சி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மதிப்பீடு ஆய்வு அறிக்கை கலந்துரையாடல் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட  செயலாளரும் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்ஷினி  சிரிகாந்த கலந்துகொண்டார் .
 
கலந்துரையாடல் நிகழ்வில்  கல்வி திணைக்கள அதிகாரிகள் ,உள்ளூராட்சி மன்ற சபை உறுப்பினர்கள் ,,,மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள்  , பிரதேச சபைகள் ,ஆகியவற்றின் , உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எக்டெட்  மற்றும்   வறுமை ஆராச்சி நிலையத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7