
இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிப்பெற்று வசூலை வாரி குவித்துள்ளது.
தற்போது நடிகர் விஜய் எந்தவொரு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் உள்ளார். அடுத்த மாதம் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளர்.
இந்நிலையில் நடிகர் விஜய், நேற்று(வியாழக்கிழமை) மாலை சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் ஊடகவியலாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
வந்திருந்த ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தங்க நாணயம் ஒன்றுடன் தனது கையெழுத்து போட்ட புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார் விஜய்.
