ரஷ்யாவுடன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலேயே உக்ரேனின் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடா தமது இராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக உக்ரேன் அரசியல்வாதியான அன்ட்ரி ஷெவ்சென்கோ தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில், கருங்கடலில் 3 உக்ரேனிய கப்பல்கள் மற்றும் 24 மாலுமிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடல்பகுதியில் நடந்த மோதலைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே ஜி-20 மாநாட்டின்போது நடைபெறவிருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.