‘நாடு சுதந்திரம் அடைந்தபோது தொலைநோக்கு சிந்தனை இல்லாத காங்கிரஸாரின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலம் அமைந்திருக்கும் கர்த்தார்பூர் பகுதியை நாம் இழந்துவிட்டோம்’ என்று ராஜஸ்தான் தேர்தல் பிரச் சாரத்தில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார். சீக்கிய மதத்தினரின் உணர்வுகளை காங்கிரஸ் மதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று தனது முகநூல் பதிவில், ‘‘காங்கிரஸ் தலைவர் களுக்கு போதுமான ஞானம் இல் லாததால் கர்த்தார்பூரை இழந்து விட்டதாக பிரதமர் மோடி கூறு கிறார். தற்போது அவருக்கு உருவாகியுள்ள எண்ணத்தின்படி, தன்னை உயர்த்திக் கொள்வதற் காக மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரைக் கூட மோடி தரம் தாழ்த்துவார்’’ என்று கூறியுள் ளார். பஞ்சாபில் இருந்து சீக்கி யர்கள் கர்த்தார்பூர் சென்று வழிபட வசதியாக பாதை அமைப்பதற் கான அடிக்கல்நாட்டு விழா கடந்த வாரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.