மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு கூழாவடி பகுதியில்
இன்று அதிகாலை 04.30 மணியளவில் கொழும்பில் இருந்து
மட்டக்களப்பை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை
ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்
உயிரிழந்த நபர் 51
/ 1 , கூழாவடி பகுதியை சேர்ந்த 78 வயதுடைய புதுவன்
ஆறுமுகம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார்
மேற்கொண்டு வருகின்றனர்