( வந்தாறுமூலை நிருபர் தீபன்)
இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையூடாக டெங்கு நுளம்பின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு இன்று வெள்ளிகிழமைகாலை 9.00 மணி (14) மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை கிராமமக்களுக்கு நுளம்புவலைகள் மற்றும் கிணறுகளை மூடிப் பாதுகாக்கும் தட்டுகளும், குடியிருப்புக் கிராமமக்களுக்கு நுளப்புவலைகளும் வழங்கி வைத்தனர்.
இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை தலைவர் த.வசந்தராசா பிரதேச பொதுசுகாதார வைத்திய அதிகாரி .ஸ்ரீறிநாத் பிரதேசபொதுச் சுகாதார உத்தியோகஸ்தர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பலாச்சோலை கிராமத்தில் தெரிவு செய்யப்பட்டசமார் 125 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகளும் 40 குடும்பங்களுக்கு கிணறுகளை மூடிப் பாதுகாக்கும் நுளம்புவலை தட்டுக்களும் வழங்கிவைத்தனர்.