கடைசி நிலம்.
♪
இப்பிரபஞ்ச வாழ்வின்
எல்லைகள்
கடவுளால் அடையாளமிடப்பட்டுள்ளது
நீள்தலின் பரப்பு
ஆதியின் முனைகள்
பொய்மைகளால் எழுதப்பட்டிருக்கும்
வாழ்வின்
கடைசியின் முறிப்புகள்
கடைசி நிலம்
கடைசி நாள்
கடைசி சூரியன்
கடைசி காற்று
கடைசி மூச்சு
கடைசி வார்த்தை
கடைசி மௌனம்
கடைசி இசை
கடைசி மழை
கடைசி முத்தம்
கடைசி உணவு
கடைசி காட்சி
கடைசி தூக்கம்
கடைசி கனவு
கடைசி சந்தோசம்
கடைசி உணர்வு
கடைசி புன்னகை
கடைசி இச்சை
கடைசி ஞானம்
கடைசி வலி
கடைசி தருணம்
வானவரின் ஊது குழலில்
பூமி வாழ்வு உடைந்து
நீட்சியான வாழ்வின் புதிய பக்கங்களுள்
நுழைவேன் நான்
கடைசி ஆசையை வரைந்தவனாய்
கடவுளையும் தூதுவரையும் சந்திக்கும்
பெரு மகிழ்வுடன்.
_ ஏ.நஸ்புள்ளாஹ்.
|