LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 3, 2018

மாற்றமும் மன மாற்றமும் -34

வாழ்வில் எல்லாப் பொழுதுகளிலும் எம் வாழ்வு போற்றுதற்குரியதாய் இருப்பதில்லை. அநேகமான சந்தர்ப்பங்களில் இது எமக்குத் தெரியத்தான் செய்கிறது. உலகில்  கெட்டவராய் வாழ்வதென்பது ஒருவருக்குரிய ஆசையாய் இருக்க முடியாது. எனவேதான் எம் வாழ்வு மாற்றப்படவேண்டும், மாற்றமைடய வேண்டும் என்றெல்லாம் நாம் நிறையவே விரும்புகிறோம்.  இருந்தாலும் எவ்வளவுதான் நாம் முயன்று நின்றாலும் எம்மை மாற்றியமைத்துக் கொள்ள எம்மால் முடியாமல் போய்விடுகிறது.

நூன் மாற வேண்டும், என் இயல்பில் நான் மாறவேண்டும், என் குணத்தில் நான் மாற வேண்டும், என் சிந்தனை சொல் செயல் அனைத்திலுமே நான் மாற வேண்டும் -  மொத்தத்தில் என் வாழ்க்கை முறையே மாற வேண்டும் என்றெல்லாம் நாம் சிந்திக்கின்றோம், முயல்கின்றோம். அப்படியான மாற்றம் எம்முள் உருவாவதன் மூலம், பிறர் மட்டில் நான் காட்டும் கொடுமைகள், புரியும் தீங்குகள்,  இழைக்கும் துன்பங்கள் அகல வேண்டும் . என்னால் மற்றவர்கள் - குறிப்பாக என் குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார் உறவினர், அயலவர்  என்று என்னைச் சுற்றிலுமாக வாழ்கின்றவர்கள் என்னால், என்பொருட்டு, எனக்காக சிந்துகின்ற கண்ணீர் மறைய வேண்டும் என்று நாம்  விரும்பாமலில்லை.. .. விரும்புகின்றோம் . . . பல வேளைகளில் அதற்காக முயற்சியும் செய்திருக்கின்றோம்.

எண்ணற்ற சந்தர்ப்பங்களில் இதற்காக இறைவனை வேண்டவும் செய்திருக்கிறோம். எம்மை மாற்றியமைக்க அவரது அருளுதவியை கேட்டு நின்றிருக்கின்றோம். ' இறiவா நான் மாற வேண்டும்' ! ஒரு கட்டத்தில்  நாம் இறைவனது கரங்களில் எம்முடைய வேலையை அப்படியே தள்ளிவிடவும் செய்கிறோம்.  'நான் மாற வேண்டும்' என்ற பொறுப்புணர்வோடு கேட்ட நாம் பின்னர், 'இறiவா என்னை மாற்றிவிடு .. .. என்னை மனிதனாக ஆக்கி விடு' என்று நாம் செய்ய வேண்டிய வேலையை இறைவன் கையில் முழுமையாக ஒதுக்கி விடுகின்றோம். படைத்தவன் நீதானே பார்த்துக் கொள் என்கிற மாதிரி எமது செயல் அமைந்துவிடுகிறது இல்லையா?

இது வேடிக்கையாகவில்லை? .. ..

இந்த மண்ணில் இறைவன் எம்மைப் படைக்கின்றபோது மனிதர்களாகத்தானே எம்மைப் படைத்தார். படைப்புக்கள் ஒவ்வொன்றையும் நல்லவையாகத்தானே அவர் கண்டார், மகிழ்ந்தார். அப்படி இருக்கத்தக்கதாக இந்த மண்ணில் என்ன நடந்தது? நுடக்கிறது? ஆபேலைப் பார்த்து பொறாமைப்பட காயினுக்குச் சொல்லித்தந்தது யார்?  .. ..அன்று முதல் இன்று வரையிலும்  மண்ணில் நடக்கின்ற விபரீதங்களுக்கெல்லாம் யார் காரணம்? நாம்தானே?

நம்மால்தானே இங்கு தீங்கு இழைக்கப்படுகின்றது.. .. நம்மால் தானே வேதனை இங்கு உருவாக்கப்படுகிறது.. .. நாம்தானே கொடுமையை மண்ணில் விதைக்கின்றோம். இதனால் ஒன்று மட்டும்; நிச்சயமாகிறது. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார்கள். .. 'உன்னை நீ மாற்றிக் கொள் .. ..உலகில் ஒரு கெட்டவன் குறைந்தான் என எண்ணிக் கொள் ' என்பதுபோல,

எம்மாலேயே தீமையை இந்த மண்ணில் ஒழிக்க முடியும், எம்மர்ல் மட்டுமே துன்பத்தை இங்கு கருவறுக்க முடியும். எம்மால்தான் எம்மை தீங்கு இழைப்பதினின்றும் தடுத்துக் கொள்ள முடியும், விடுவித்துக் கொள்ள முடியும். வேதனைகள் சோதனைகளினின்றும் எம்மை மற்றவரல்ல மீட்பது, எம்மை நாமே மீட்டுக் கொள்ள வேண்டும்.

மாறவேண்டியவர்களாய் நாம் இருக்கத்தக்கதாக. அதற்காக முயற்சியெடுக்க வேண்டியவர்களாய் நாம் இருக்கத்தக்கதாக .. .கடவுளே என்னை மாற்றிவிடு என்று முயற்சியை கடவுள் பக்கமாக நகர்த்திவிட்டு மாறுவதூ இல்லையா என்ற முடிவை மட்டும் நம் கையில் வைத்திருப்பது அழகல்ல. கடவுள் முயற்சிக்கலாம் ஆனாலும் மாறுவதும் மாறாமலிருப்பதும் நாமல்லவா?

ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை மார்போடணைத்து அரவணைக்கவே செய்வாள், செய்கிறாள். அது தூய்மையாக இருக்க வேண்டும் என்றுதான் அவள் விரும்புகிறாள் . ஆனாலும் அவளது பிடியினின்றும் திமிறிக் கொண்டு புழுதியைத் தேடி அது விரைகிறது.. .. அழுக்கு அடைகிறது.

எப்பொழுதும் முயற்சி நம் கையிலும், முடிவு ஆண்டவன் கையிலுமிருப்பதுதான் நல்லது. முயற்சி திருவினையாக்கும். மாந்தர்தம் உள்ளத்தனையது யர்வு  என்ற வள்ளுவன் மொழிக்கேற்ப,  எம் உள்ளத்தின் ஆழமான முயற்சிதான் எம்மை நல் மனிதர்களாக உயர்த்தி வைக்க வல்லது. எம்முயற்சியின் வல்லமை அல்லது வேகம் கண்டு இறைவன் எம்மை மாற்றியமைக்க  அருள் தருவார் என்பது மட்டும் திண்ணம்!



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7