இவரின் இயக்கத்தில் அடுத்து விஜய்சேதுபதி நடிக்கவுள்ள படத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் ஜீவா கேபிள் டி.வி. வேலை பார்ப்பவரா நடிக்கவுள்ளார்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் ஜீவா ஜோடியாக புதுமுக நடிகை நடிக்கவுள்ளதாகவும், மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மாயவரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெறவுள்ளது.