நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் 2.9 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
1954ஆம் ஆண்டு எழுதப்பட்ட கடிதமானது, 1.5 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்க்கப்பட்ட தொகையைவிட கிட்டத்தட்ட இ
ரு மடங்கிற்கு இக்கடிதம் விற்பனையாகியுள்ளது.
தத்துவ அறிஞர் எரிக் குட்கின்டிற்கு தனது பணி தொடர்பாக எழுதிய ஒன்றரை பக்க கடிதமே இவ்வாறு ஏலமிடப்பட்டுள்ளது.
விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் இடையிலான விவாதத்தின் முக்கிய ஒரு குறிப்பாக இக்கடிதம் விளங்குகிறது.
தான் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கடிதமானது, ‘கடவுள் கடிதம்’ என அழைக்கப்படுகிறது.
அல்பர்ட் ஐன்ஸ்டீனின் கடிதங்கள் இதற்கு முன்னரும் பல முறை ஏலம் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.