(பாண்டி)
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரண்டு நலன்புரி சங்கத்திற்கு கொட்டகைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை செயலகத்தில் இடம்பெற்றது.

மேலும் அதிதிகளாக செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் மற்றும் நலன்புரி சங்க பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து வந்தாறுமூலை நலன்புரி சங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியாக கொட்டகையும், களுவன்கேணி நலன்புரி சங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியாக கொட்டகையும், வழங்கி வைக்கப்பட்டது.
