
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் அவர்களின் புதல்வியின் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக கிண்ணியாவுக்கு வருகை தந்த வேவையிலேயை குறித்த மஹஜர் பிரதமரிடம் கிண்ணியாவில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமனம் செய்ய கடந்த ஆண்டு(2017)விண்ணப்பம் கோரப்பட்டு முறையே நேர்முகத் தேர்வு,மற்றும் உடற்தகமை தேர்வு என்பனவும் இடம்பெற்றது.
உடற்தகமை தேர்விற்கு அதிகளவானோர் பங்கு பற்றி இருந்த போதும் 3850 பேர் மாத்திரமே நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டோர் விளையாட்டில் தேசிய,மாகாண ரீதியில் தங்களது திறமைகளை நிரூபித்து முதலாம்,இரண்டாம் இடங்களையும் பதக்கங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்பட்டியல் இவ்வாண்டு(2018) ஜூன் மாதமளவில் மாகாணத் திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
மாகண திணைக்களங்கள் நியமனதாரர்களின் பெயர்களை உத்தியோகபூர்வமாக தங்களது பெயர்பலகையில் இட்டிருந்தார்கள்.
அதன் பின்னர் குறித்த நியமனமானது வழங்கப்படமால் இன்று வரை இழுபறி நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 3850 இளைஞர்,யுவதிகள் குறித்த நியமனத்தை வழங்க கோரி கடந்த 6 மாதங்களாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அதன் ஒரு அங்கமாக கடந்த 2018/12/04 ம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஜனாதிபதியின் செயலாளர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக உறுதிமொழிக் கடிதம் ஒன்றினை தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கை பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கத்திற்கு வழங்கி இருந்தார்.
கடந்த 6 மாதங்களாக இழுபறிநிலையை கொண்டு காணப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமன தாமதத்தால் அன்றாடம் 3850 இளைஞர்,யுவதிகள் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.
ஏற்கனவே செய்த வேலைகளை கைவிட்டு குறித்த நியமனத்திற்காக காத்திருக்கிறோம்.
தொடர்ச்சியான நியமன தாமதத்தாலும்,ஏமாற்றுதலாலும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளோம்.எனவே இவை ஒரு முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

கடந்த 06 மாதங்களாக இழுபறிநிலையில் உள்ள இந் நியமனத்தை விரைவாக வழங்க கோரி அரசாங்கதிற்கு அழுத்தத்தினை தாங்கள் தொடர்ந்தும் போராடி வருகிறோம் இதனால் பாரிய விரக்தி நிலை எமக்குள் ஏற்பட்டு விட்டது.
எனவே எமது கோரிக்கையை ஏற்று நாட்டின் ஜனாதிபதி,பிரதம மந்திரி மற்றும் கல்வியமைச்சர் ஆகியோரிடம் பேசி எமது நியமனத்திற்கான தீர்வினை பெற்று தர வேண்டும் என 3850 குடும்பங்கள் சார்பாக அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கத்தினர் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.
இந் நிகழ்வின் போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி தேசிய நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக வாணிப கைத்தொழில் மீள்குடியேற்ற அமைச்சருமான றிஷாட் பதியுதீன் குறித்த கடிதத்தின் பிரதிகள் இதன் போது கையளிக்கப்பட்டது.
(அ . அச்சுதன்)
