திருகோணமலை~கந்தளாய் ரெக்டோ நிறுவனத்தின் அனுசரணையில் கப்பல்துறை பிரதேசத்தில் வீடுகள் இன்றி வாழும் மக்களுக்கு அமைக்கப்பட்ட நிரந்தரமான வீடுகள் உரிய பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு 2018.12.01 சனிக்கிழமை நடைபெற்றது.
ரெக்டோ நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அஸார் BA தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயீஸ் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் விஷேட அதிதியாக தோப்பூர் பிரதேச சபை உறுப்பின் ஜனாப் தாணீஸ்
கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.நசீர்,தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.றிக்காஸ் அகமட்,ரெக்டோ நிறுவன திட்ட உத்தியோகத்தர்கள் என பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.(ந)