LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 2, 2018

அவுஸ்திரேலியாவில் இலகுவாக குடியேறும் வகையில் புதிய விசா நடைமுறை!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தமது பெற்றோர்களை அந்நாட்டுக்குள் அழைப்பதற்கான புதிய விசா நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

தற்காலிக பெற்றோர் விசா அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்விசா தொடர்பான சட்டமூலமான Migration Amendments (Family Violence and Other Measures) Bill இனை கடந்த 2016ம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த லிபரல் முன்மொழிந்திருந்த நிலையில் தற்போது குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள தங்களது குடும்பங்களைச் சந்தித்துக்கொள்ள இப்புதிய நடைமுறை விசா வழியேற்படுத்தும் என குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நிரந்தரமாக வசிக்கும் அனுமதியினைப் பெற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களது பெற்றோரை 3 ஆண்டுகள் தற்காலிக விசாவில் வரவழைக்க 5000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வரும் பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அத்துடன், இவ்விசாவில் வரக்கூடியவர்கள் Medicare எனப்படும் அரசின் மருத்துவ சேவைகளை பெற முடியாது என்பதுடன், அவர்கள் தங்களுக்கான தனியார் மருத்துவக் காப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும், இவ்விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வரும் பெற்றோர்களுக்கு அனைத்து மருத்துவ செலவுகளையும் அவர்களது பிள்ளைகளே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7