கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கான
மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் மிக அண்மையில் கிளிநொச்சி மாவட்ட
கூட்டுறவாளர் மண்டப வளாகத்தில் நடத்தப்பட்டது.
ஏற்கனவே பிரதேச மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப்
பெற்றோர் மாவட்ட மட்டப் போட்டிகளில் பங்குபற்றினார்கள்..
ஆண், பெண் இரு பாலாருக்கும் தனித் தனியாக முச்சக்கர வண்டி ஓட்டம்,பலூன்
ஊதி உடைத்தல்,வேக நடை, 100 மீற்றர் ஓட்டம்,நீர் நிரப்புதல் ஆகிய
போட்டிகள் நடைபெற்றது.
மாவட்ட மட்டப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுவோர் டிசெம்பர் 11 ஆம்
திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின
விழாவில் வைத்துப் பரிசளித்துக் கௌரவிக்கப்பட உள்ளனர்.
வருடா வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் இப்
போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.