LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 24, 2018

த.தே.கூ. ஜனநாயகத்தின் பாதையில் சென்ற காரணத்தினால் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார்.- ஞா.ஸ்ரீநேசன்-

                              (தீபன்)  
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் சித்தாண்டி வட்டார உறுப்பினர் மு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

எமது மக்கள் பணத்தையும், பதவியை பெறுவதற்காக ஆணை தரவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்க முடியாது என சிங்கள அரசியல் வாதிகள் மத்தியில் எமக்கு கௌரவம் இருந்தது. இந்த கௌரவத்தை கெடுக்கும் வகையில் ஒருவர் சென்றுவிட்டார்.

அவர் திரும்ப ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ள குழுவினருடன் இணைந்து வருவதற்கு பேச்சுவார்த்தை செய்வதாக அறிய முடிகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வாக்கு கேட்டதற்காக வெட்கப்படுவதாக அவர் கூட்டங்களில் பேசியுள்ளார். 

ஐந்து ஆண்டுகள் பதவிக் காலத்துக்காக தெரிவு செய்யப்பட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தை இடைநடுவே ஜனாதிபதி கலைத்திருப்பது சர்வதிகார போக்கான செயற்பாடு. எமது பிரதேசங்களின் அபிவிருத்திக்காக பல நிதி ஒதுக்கீடுகள் வரவிருந்த நேரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

டிசம்பர் 7ஆம் திகதி அரசியல்யாப்பு பாராளுமன்றத்தில் வரவிருந்தது. கடந்த காலத்தில் குற;றச்செயல்கள், நிதி மேசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு நீதித்துறை முயற்சிகள் மேற்கொண்ட வேளை அவர்களை தப்பவைப்பதற்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. 

எமது மக்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது இவரது காலத்திலேயே அதிகம் நடைபெற்றது. மஹிந்த ராஜபக்ஷ மீண்டு பதவிக்கு வருவதற்கு இடமளிக்க கூடாது என பலர் எமக்கு கூறினார்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகவும் கை உயர்த்த கூடாது. நடுநிலையும் வகிக்க கூடாது என குறிப்பாக வன்னிப் பிரதேசத்திலிருந்து பல குரல்கள் வந்தன. அதன் அடிப்படையில் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கினோம். யார் வெல்வது என்பது முக்கியமல்ல. யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எமக்கு முக்கியம்.

ஓவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் தங்கள் பக்கம் சேரல்பதற்கு 30 கோடி முதல் பேரம் பேசப்பட்டது. இதை ஜனாதிபதியே தனது உரையில குறிப்பிட்டடிருந்தார்.

2004ல் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவர் தங்கேஸ்வரி அக்கா. அவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் 2010ல் இணைந்து ஆயிரத்தி 400 வாக்ககளையே பெற்று தோல்வியைத் தழுவினார். அதேபோன்று பியசேன தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடு வெற்றி பெற்று மஹிந்த பக்கம் சென்றார். அதேபோன்று தற்போது வியாழேந்திரன் சென்றுள்ளார்.  





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7