சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியில் வைத்து இன்று(சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையின் அரசியல் வரலாற்றிலே சிறுபான்மை இனம் என்று தமிழர்களை ஓரங்கட்டிய சிங்கள அரசியல் வாதிகள் இன்று தமிழினத்திடம் மண்டியிடுகின்ற ஒரு நிலை வந்துள்ளது.
இவ்வாறு ஒரு நிலை ஏற்ப்படும் என்று மகிந்த ராஜபக்ச நினைத்திருப்பாரா? இது அரசியலில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கின்றதை உண்மைப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவே நாம் பாக்கிறோம்
இந்த மகிந்த ராஜபக்ச எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்ற வகையில் பேரம் பேசுகின்ற நிகழ்வில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதென்பது அது அவர் இவ்வாறானதொரு நிலை தனக்கு ஏற்படும் என்று நினைத்திருக்கவேமாட்டார்.
இவர் என்ன விலை கொடுக்க முடியும் எமது தமிழ் இனத்துக்காக தங்கள் இன்னுயிர்களை ஈர்த்த எங்கள் தியாகிகளுக்கு என்ன விலை கொடுக்க முடியும். இது ஒரு தாய் மனத்தினுடைய கண்ணீர் ஒரு தாயினுடைய மன உக்கிரம் தான் இன்று மகிந்தவை மண்டியிட வைத்திருக்கிறது
அதுமட்டுமல்ல தமிழினம் தங்களுக்கு தேவையில்லை அவர்கள் சிறுபான்மை இனம் என்று ஓரங்கட்டி வைத்திருந்த தேசிய கட்சிகள் அனைத்துமே இன்று தமிழர்களையே நம்பியிருக்கிறது.
இந்த தமிழர்கள் ஆணையிட்டு அனுப்பிவைத்திருக்கின்ற கூட்டமைப்பை நம்பியே அவர்கள் இன்று ஆட்சிப்பீடம் ஏறவேண்டிய நிலை வந்துள்ளது. தமிழினம் அவர்களுக்கு அடிமையாகாது என்றும் இந்த மக்களுடைய நின்மதியான விடிவுக்காக நின்மதியான வாழ்வுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் மக்களோடு இணைந்து மக்களை ஏமாற்றாத வகையில் பயணிக்கும் என நான் ஆணித்தரமாக கூறுகின்றேன்.
ஏனைய உறுப்பினர்களிடம் எவ்வளவு பேரம் பேசப்பட்டது என எனக்கு தெரியாது ஆனால் என்னிடம் 6 கோடி முதல் 50 கோடிவரை பேரம் பேசப்பட்டது“ என தெரிவித்துள்ளார்.