மட்டக்களப்பு மாவட்ட
வலைப்பந்தாட்ட வீரர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் இன்று மட்டக்களப்பில்
நடைபெற்றது
இலங்கை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களமும்
மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவும் இணைந்து நடாத்தும் மாவட்ட
வலைப்பந்தாட்ட வீரர்களுக்கான
ஒருநாள் பயிற்சி முகாம் மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்றது .
இலங்கை விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள
வலைப்பந்தாட்ட திட்ட உத்தியோகத்தர் திருமதி டி .எம் .பி . குமாரி ஹாமி தலைமையில் நடைபெற்ற
ஒருநாள் பயிற்சி முகாமில் மட்டக்களப்பு மாவட்ட வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள்,
மாவட்ட திணைக்கள வலைப்பந்தாட்ட வீரர்கள் ,பாடசாலை மற்றும் கழக வலைப்பந்தாட்ட வீர்வீரங்கனைகள்
கலந்துகொண்டனர்
பயிற்சி முகாமின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய இலங்கை
விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள வலைப்பந்தாட்ட திட்ட உத்தியோகத்தர் திருமதி டி
.எம் .பி . குமாரி ஹாமி கருத்து
தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
வலைப்பந்தாட்ட வீரர்களை புதிய தொழில்நுட்ப
ரீதியில் பயிற்றுவிக்கப்பட்டு வீரர்களை தேசிய ரீதியில் கொண்டு செல்ல இந்த வலைப்பந்தாட்ட பயிற்சி முகாம் நாடத்தப்படுவதாக
தெரிவித்தார் .
இதன் ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட மேலதிக
அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் , மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே .டி சந்திரபால , மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி
.ஈஸ்வரன் மற்றும் அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் , கழகங்களின் வீரவீராங்கனைகள் , வலைப்பந்தாட்ட
பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்டனர்