LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 22, 2018

கிண்ணியா நகர சபையின் சபை அமர்வு ஆரம்பமானது

கிண்ணியா நகர சபையின் சபை அமர்வு தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் நேற்று (21) வெள்ளிக் கிழமை நகர சபையின் விசேட சபை மண்டபத்தில் ஆரம்பமானது.

2019 ம் ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்ட அறிக்கைகளை நகர சபையின் தவிசாளரினால் வாசிக்கப்பட்டது. சக உறுப்பினர்களின் ஆதரவுடன் 2019 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

தவிசாளர் தலைமையில் 13 உறுப்பினர்களைக் கொண்ட நகர சபையில் எவ்வித வாக்கெடுப்பும் இன்றி ஏகமானதாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

 ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கடசிகள் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளித்திருந்தனர். குறித்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக 2019 ம் ஆண்டில் புதிய பல அபிவிருத்திகளை கிண்ணியாவுக்கு மேற்கொணாடு நகரை அபிவிருத்தி மயமாக்கப்பட்ட நகராக மாற்றியமைக்கவுள்ளதாகவும் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் வரவு செலவு திட்ட உரையின் போது தெரிவித்தார்.

அ . அச்சுதன்




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7