ரஷ்யாவின் Tu-160 எனப்படும் இந்த விமானங்கள், அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன்மிக்கவை.
இவை தற்போது 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து வெனிசுலாவில் தரை இறங்கியுள்ளன. குறித்த விமானங்களுடன் சரக்கு விமானம் ஒன்றும், பயணிகள் விமானம் ஒன்றும் உடன் சென்றுள்ளன.
எதற்காக இந்த விமானங்கள் வெனிசுலாவுக்கு கொண்டு வரப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகவில்லை. விமானங்களில் ஆயுதங்கள் உள்ளனவா? இன்னும் எத்தனை நாட்களுக்கு விமானங்கள் வெனிசுலாவில் இருக்கும் என்ற தகவல்களும் வெளியிடப்படவில்லை.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ “இரண்டு ஊழல் நிறைந்த அரசாங்கங்கள் பொது நிதியை வீணாக்குகின்றன” என கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரது வார்த்தைகளை “முற்றிலும் பொருத்தமற்றது” என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.