வேட்பாளர்கள் பட்டாளம்
உறவுகளைச் சொல்லி
உட்புகுவார்கள்
அன்பு காட்டி
அரவணைத்து
அகமகிழ்ந்து சிரிப்பார்கள்.
புள்ள தங்கச்சி
மச்சான் எங்க
நான் இந்த மொற
இலக்ஷன் கேக்கன்
எனக்கும் ஒரு வோட்டு
போடு புள்ள என்று
புன்னகையால் கெஞ்சுவார்கள்.
செத்துப் போன உறவுகளை
சேதமில்லாமல் புதுப்பிப்பார்கள்
நானும் ஒரு வேட்பாளனாய்
போட்டியிடுகின்றேன்
எனக்கும் ஒரு வாக்களியுங்கள்
வாழ்நாளில் உங்களை
ஒருபோதும் மறக்கமாட்டேன்
உங்கள் தேவைகளை
நிறைவு செய்வேன்.
பி.எம்.எம்.ஏ.காதர்