சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தினத்தினை முன்னிட்டு
நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு
அமைய சர்வதேச மாற்றுத்திரனாளிகள்
தினத்தினை அனுஷ்டிக்கும் வகையில் கிழக்குமாகாண சமூக சேவைகள் திணைக்களம்
,மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் , மட்டக்களப்பு மாவட்ட
மாற்றுத்திரனாளிகள் அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும்,
விழிப்புணர்வு நிகழ்வுகளும் மட்டக்களப்பில்
நடைபெற்றது.
“மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தல் மற்றும் உள்வாங்குதல், சமத்துவம் உறுதி
படுத்தல் “ எனும் தொனிப்பொருளில் மாபெரும்
விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு தன்னாமுனை பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு
தன்னாமுனை மியாணி மண்டபத்தை வந்தடைந்து, அதனை தொடர்ந்து மண்டபத்தில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றது.
கிழக்குமாகாண
சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் என்
.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக
கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த
போகொல்ல்லாகம சிறப்பு ஆதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , , மற்றும் மத
தலைவர்கள் ,சமூக சேவை அமைப்புக்களின் நிர்வாகிகள் , சமூக சேவை
உத்தியோகத்தர்கள் , அரச அதிகாரிகள் , அரச
சார்பற்ற பிரதிநிதிகள் ,அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் ,மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது
மாற்றுத்திறனாளிகளின் உடல் உள திறன்களை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை கலாசார , நிகழ்வுகளும், வீதி நாடகம் , ஆசிரியார்காளுக்கான
கௌரவிப்பு ,பொது சேவைகளில் ஈட்பட்டுள்ள சமூக் மாற்றுத்தினாளிகள் விருதுகள் வழங்கி
கௌரவிக்கப்பட்டனர்