இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து சமய அறநெறிக் கல்விக்கான தேசிய சேவை மேன்மை விருதுகள் வழங்கும் நிகழ்வு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் எஸ். உமா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, செயலாளர் சிவானந்த ஜோதி, ராமகிருஷணமிசன் சுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை பூராகவும் உள்ள அறநெறி பாடசாலைகளில் உள்ள 100 சிறந்த அறநெறி ஆசிரியர்கள், 100 சிறந்த அறநெறி பாடசாலைகள் என்பவற்றுக்கு இந்து சமய அறநெறிக் கல்விக்கான தேசிய சேவை மேன்மை விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கொக்குவில் சக்தி அறநெறிப் பாடசாலை ஆசிரியர் க.ரகுநாதனுக்கு சிறந்த அறநெறி ஆசிரியருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.