நாடாளுமன்ற கலைப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்காக இன்று(செவ்வாய்கிழமை) உயர் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு சவால் விடுக்கின்றமையானது நாட்டில் மஹிந்த தரப்பு காட்டுச் சட்டத்தை முன்னெடுப்பதாகவே அமையும்.
இந்த சூழ்நிலையில் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவேனும், மீண்டும் ஒரு பிரதமரை நியமிக்க முயற்சிக்கும் நாடகத்தை கைவிட்டு, நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னரான அரசாங்கத்தினை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.