
ஹுருண்டாரி மற்றும் டன்டாஸ் தெருக்கள் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 8 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று வாகனத்தை மோதிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், இதன் பின்னர் கட்டுப்பாட்டை இழந்து வேறு இரு வாகனத்துடன் மோதிவிட்டு தொடர்ந்து பொலிஸாரின் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஒரு ஆண் மற்றும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து தப்பி ஓடிய மற்றுமொருவரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
