இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயரமான், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார்.
நெல் ஜெயராமன் 174 அரியவகை நெல் வகைகளை சேகரித்ததுடன், மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.
அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்
பாமக நிறுவனர் ராம்தாஸ் தனது இரங்கல் செய்தியில் இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதற்கும் நெல் ஜெயராமன் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை என்று புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
விவசாயிகள் தங்கள் உயிர்ப் பாதுகாவலனை இழந்து விட்டார்கள் என நெல் ஜெயராமனுக்கு வைகோ இரங்கல் தெரிவித்தார்.
திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின், ”நெல்ஜெயராமனின் மறைவு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு பேரிழப்பாகும் என்று தெரிவித்தார்.
இதனை விடவும் முதலமைச்சர் பழனிச்சாமியும் ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கி அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்.
நெல் ஜெயராமன் உடலுக்கு ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இவரை அப்பலோ மருத்துவமனையில் சேர்த்து அவரது இறுதிச்சடங்கையும் பொறுப்பெற்று நடத்தியது நடிகர் சிவகார்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.