இம்;முறை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக தென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பு(செஸ்வோ)ஏற்பாடு செய்த கருத்தரங்கு வியாழக்கிழமை(22-11-2018)மருதமுனை சி.சி.எஸ்.கல்லூரியில் நடைபெற்றது. இங்கு தலைமையுரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஆசிரியர்களான எம்.ஏ.சிறாஜூதீன்,ஜே.எம்.நியாஸ்,எம்.பைரூஸ், செஸ்டோ ஸ்ரீலங்காவின் உறுப்பினர்களான எம.ஏ.அப்றார் ஹ_சைன்,அல்-ஹாபில் எம்.ஏ.அஸ்ரின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இந்தக் கருத்தரங்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு நாபி.எம்.முஸ்னி மேலும் உரையாற்றுகையில் :-இளைஞர.;யுவதிகளை வழப்படுத்தி நல்வழிகாட்ட ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இளைஞர் கழகங்களை அமைத்துதுச் செயற்பட அரசாங்கம்; பிரதேச செயலகப் பிரிவுகளில் இளைஞர் சேவை அதிகாரிகளை நியமித்துள்ளது.இந்த அதிகாரிகள் இளைஞர்,யுவதிகளை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நல்ல வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும்.
இன்றைய இளைஞர.;யுவதிகளுக்கு நல்ல வழிகாட்டல்கள் இல்லாததால் பலர் போதைவஸ்த்துக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் இதனால் எதிர்கால இளம் சந்ததிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே இளைஞர்,யுவதிகளை நல்வழிப்படுத்துவதற்கு இளைஞர் சேவைகள் அதிகாரிகள் முன்வர வேண்டும்.அத்தோடு சமூக மேம்பாட்டாளர்களும் முன்வரணே;டும் என செஸ்டோ ஸ்ரீலங்காவின் தலைவர் நாபி.எம்.முஸ்னி தெரிவித்தார்.இந்த நிகழ்வில் கேள்விகளுக்கு துரிதமாக விடையளித்த மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன
பி.எம்.எம்.ஏ.காதர்