LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, December 14, 2018

விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் பெயரை மாற்றுமாறு எச்சரிக்கை !

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சீதக்காதி’ படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரகீம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் “சீதக்காதி என்ற பெயரில் பொழுதுபோக்கு திரைப்படம் எடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சீதக்காதி தமிழர்களின் ஒரு அடையாளமாக வாழ்ந்தவர். இஸ்லாமியராக இருந்தாலும் அனைத்து  மக்களுக்காகவும், மனிதநேயத்திற்காகவும் வாழ்ந்த மாமனிதர் சீதக்காதி. விஜய் சேதுபதி ஒரு செவ்வியில் சீதக்காதி ஒரு நகைச்சுவை திரைப்படம் என கூறியுள்ளார்.
இந்நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதக்காதியின் கண்ணியத்தை சீரழிக்கும் எந்தவித நடவடிக்கையையும் இந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது. ஆகையால் ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதியின் சிறப்பை போற்றும் விதமாக இல்லாமல் பொழுதுபோக்கு படம் எடுத்து அதற்கு சீதக்காதி என பெயர் சூட்டுவதை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உடனே சீதக்காதி என்ற பெயரை மாற்ற வேண்டும். இல்லை என்றால் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்“ என அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாக இருக்கும் படம் சீதக்காதி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.ரம்யா நம்பீசன், காயத்ரி, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்துக்கு சீதக்காதி என்று பெயர் வைத்ததற்கு இந்திய தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7